×

நாகையில் நடந்தது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது

சீர்காழி, ஜன.24: நாகை மாவட்ட் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் தலைமை வகித்தார். சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ஜெயராமன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுரு, டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தனர். முதல்வர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் பேசுகையில், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டக் கூடாது.

பெற்றோர்கள் 18 வயது நிரம்பாத தங்கள்் குழந்தைகளுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் செல்லும்போது சாலை விதிமுறைகளை அனைவரும் பின்பற்றி சென்றால் விபத்துக்களை தவிர்க்க முடியும். விபத்துக்கள் நடந்தால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் துணை முதல்வர் ஜெயந்தி கிருஷ்ணா நன்றி கூறினார்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்