×

தேரை சீரமைக்கும் பணி தீவிரம் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு குளித்தலையில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து மக்கள் ஆர்ப்பாட்டம்

குளித்தலை, ஜன. 24: கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சியில் தமிழக அரசு திட்டங்களில் ஒன்றான இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை பட்டியலிடாமல் பாரபட்சம் காட்டி பயனாளிகள் தேர்வில் குளறுபடி செய்வதாக கூறி வாளாந்தூர் கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நேற்று குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த அதிகாரி மனுவை பெறாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம மக்கள் அலுவலக வாயிலில் உள்ள காந்திசிலையிடம் மனு கொடுத்து விட்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து வாளாந்தூரில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்க வேண்டுமென மனு அளிக்க சென்றபோது வாங்க மறுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளிய மக்களை புறக்கணிக்காமல் தகுதியுள்ள அனைவருக்கும் இலவச ஆடுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என கூறி கலைந்து சென்றனர். இதனால் குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Gandhi ,
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!