×

பாலமலை பாலசுப்பிரமணி கோயிலில் தைப்பூச விழா

க.பரமத்தி ஜன. 24: பாலமலை பாலசுப்பிரமணி கோயிலில் தை பூச தேரோட்ட விழாவையொட்டி தேரை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது க.பரமத்தி ஒன்றியம், பவித்திரம் ஊராட்சியில் பாலமலை பாலசுப்பிரமணி கோயில் உள்ளது. இங்கு தினசாி அபிஷேக, பூஜைகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் முருகனுக்கும் வள்ளி, தெய்வாணை, ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் தைப்பூச தேரோட்டம் விழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இந்த கோயில் தைப்பூசம் தேரோட்டம் திருவிழாவிற்காக தேரை தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : ceremony ,Balasubramani temple ,
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா