×

கரூர் மாவட்ட விவசாயிகள் புதிய கரும்பு ரகத்தை பயிரிட்டு அதிக மகசூல் பெற ஆலோசனை

கரூர், ஜன. 24: புதிய கரும்பு ரகத்தை பயிரிட்டு விவசாயிகள் அதிக மகசூல் பெறவேண்டும் என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது
கரும்பு விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசால், கோயம்புத்தூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் உதவியுடனும், பல்வேறு கரும்பு தயாரிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும் வகையில் சிஓ11015 என்ற வகையான கரும்பு கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் 86032 என்ற ரக கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த கரும்பின் மூலம் வரப்பெறும் சர்க்கரையின் அளவைக்காட்டிலும், 0.5 சதவீதம் கூடுதல் இனிப்புச்சுவையை சிஓ 11015 என்ற வகையான கரும்பு தருகின்றது. மற்ற கரும்புகள் முழுமையாக விளைய 12 மாதங்கள் ஆகும். ஆனால் 11015 என்ற புதிக ரக கரும்பு 8 மாதம் முதல்12 மாதத்திற்குள் அறுவடை செய்யும் வகையில் உள்ளது.

எனவே விவசாயிகள் சிஓ 11015 என்ற கரும்பு ரகத்தை பயன்படுத்தினால் அதிக அளவில் மகசூல்கிடைக்கும் கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு முதல்வர், கரும்பு பயிரிடும் நிலங்களுக்கும் மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன திட்டத்தை பயன்படுத்த கூடுதல் சலுகைகள் வழங்கியுள்ளார். மற்ற பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனத்தின் மானியம் எக்டேருக்கு ரூ.113133 வழங்கப்படுகிறது. ஆனால் கரும்பு பயிரிடும் நிலங்களுக்கு கூடுதலாக ரூ.38235 சேர்த்து மொத்தம் ரூ,1,51,368 வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 11015 ரக கரும்பினை பயிரிட்டு பயன்பெற வேண்டும் என வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

Tags : district ,Karur ,
× RELATED கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி