இன்று முதல் நான்கு நாட்களுக்கு ரயில் நிலையம், ரயிலில் இசை நிகழ்ச்சி: மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில்நிலையம் மற்றும் ரயிலில்  நான்கு நாட்கள் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை  கொண்டாடுவதன் ஒரு பகுதியாக சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து சென்னை மக்களுக்கு தமிழ் கலாச்சாரத்தின் இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இதன்  தொடர்ச்சியாக இன்று முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை கலைத்தெரு விழா குழு மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பின்வரும் தேதிகளில் கலைநிகழ்ச்சி நடைபெறும். இன்று  காலை 10 மணி முதல் 12 மணி வரை விமானநிலையம் மற்றும் வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒயிலாட்டம்- விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் ஒத்த செவுரு- தமிழ் ராக் பேண்ட் மற்றும் சோலோ தியேட்டர்  சுனந்தா, பரத் நாராயண் குழுவினர் கர்நாடக இசை நிகழ்ச்சி (விமான நிலைய மெட்ரோ முதல் வண்ணாரப் பேட்டை மெட்ரோ வரை) காலை 11.30 மணிக்கு வண்ணாரப் பேட்டை ெமட்ரோ ரயில் நிலையத்தில் தேவராட்டம் மற்றும் தப்பாட்டம்  நடைபெறுகிறது.

ஜனவரி 27ம் தேதி மாலை 5 மணிக்கு- குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இசை மற்றும் நடனத்தை கற்பித்து இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்து பரப்புவதற்கான நோக்கில் செயல்பட்டு வரும் ஆன்மஜோதி என்ற  அமைப்பு, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் கர்நாடக குவார்டெட் என்ற இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளது. ஜனவரி 27ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை - சத்தியபாமா ரோட்டராக்ட் கிளப்பின் உறுப்பினர்கள்,  ெசன்ட்ரல் மெட்ரோவில் இருந்து விமான நிலைய மெட்ரோ வரை மெட்ரோ ரயிலில் இசை நிகழ்ச்சியை வழங்குகின்றனர். ஜனவரி 30ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை ஆலந்தூர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ  ரயில் நிலையம்) ஆலந்தூர் மெட்ரோ முதல் சென்ட்ரல் மெட்ரோ வரை மெட்ரோ ரயிலில் மாலை 5 மணிக்கு- அபிஷேக்கின் ஸ்டாண்ட் அப் காமடி மற்றும் பிந்துமாலினியின் மெல்லிசை நிகழ்ச்சி, மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை  சென்ட்ரல் ெமட்ரோ ரயில் நிலையத்தில், பிரீத்தி பரத்வாஜின் பாரத நாட்டியம் மற்றும் தீபனின் பறையாட்டம் (தெருநிகழ்ச்சி) நடைபெறும். பிப்ரவரி 2ம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை- ஆன் தி ஸ்டீரிட் ஆப் சென்னை,  சென்ட்ரல் ெமட்ரோ ரயில் நிலையத்தில் இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளனர். இவ்வாறு மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags : Concert ,train station ,
× RELATED இன்று முதல் நான்கு நாட்களுக்கு ரயில்...