×

செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் பராமரிப்பு இல்லாமல் குடோனாக மாறிய குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை

செங்கல்பட்டு, ஜன. 24: செங்கல்பட்டு பஸ் நிலையத்தில், பாலூட்டும் அறை குடோனாக மாறியதால், தாய்மார்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ‘தாய்மார்கள் பாலூட்டும்  அறை’ என்ற திட்டத்தினை கொண்டு வந்தார். இதனால், பொதுவெளிகளில் குழந்தைக்களுக்கு பாலூட்டும் தாய்மார்களின் கூச்சத்தை போக்கி பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் பாலூட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம்  முழுவதும் அந்தந்த நகராட்சி சார்பில் இயங்கும் வகையில் திட்டத்தின் படி, செங்கல்பட்டு நாகராட்சியில், அண்ணா புதிய பஸ் நிலையத்தில் கடந்த 3.08.2015 அன்று தாய்மார்கள் பாலூட்டும் அறை புதியதாக துவங்கப்பட்டது.இதற்காக, தமிழக  அரசு சார்பில் பெரிய விழா நடத்தி ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காணொளி கட்சி மூலம் திறந்து வைத்தார். அந்த பாலூட்டும் அறையில், தாய்மார்கள் அமர்ந்து பாலூட்ட ஏதுவாக  இருக்கைகள், 2 கழிப்பறைகள் இருந்தன. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு பஸ் நிலையம் வரும் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை பயனாக இருந்தது.

ஆனால், இதனை நகராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காமல் விட்டதால், பயனற்று போது. இதையடுத்து,  பாலூட்டும் அறையில் நகராட்சியில் துப்புரவு பணிக்கு பயன்படுத்தும் துடைப்பம், கிளீனிங் பொருட்கள் ஆகிய உபகரணங்கள் வைக்கும்  குடோனாக மாறிவிட்டது. பராமரிப்பும் இல்லாமல் 24 நேரமும் திறந்தநிலையில் உள்ளதால, குடிமகன்களுக்கு மது அருந்தும் இலவச பராகவும் மாறிவிட்டதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், பாலூட்டும் அறையின் நுழைவாயிலில்  கழிவுநீர் கால்வாய் பணி துவங்கி பாதியிலேயே நிறுத்திவிட்டதால், அங்கு கழிவுநீர் தேங்கி எந்நேரமும் கடும் துர்நாற்றம் விசுகிறது. இதனால், தாய்மார்கள் பாலூட்டும் அறை பக்கமே வருவதில்லை. இதுகுறித்து தாய்மார்கள் கூறுகையில்,  செங்கல்பட்டு பஸ் நிலையத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், மாமல்லபுரம், வேலூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அரசு பஸ்கள் வந்து செல்கின்றன.
இதனால், ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்.

அரசு மருத்துவமனைக்கு வரும் சுற்று வட்டார தாய்மார்களும் இந்த பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் அதிகம் வந்து செல்கின்றனர். ஆனால், பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த பாலூட்டும் அறையை  தற்போது பெண்கள் பயன்படுத்த முடியவில்லை. தாய்மார்கள் நலன் கருதி அரசு கொண்டு வந்த திட்டத்தை பயன்பாடில்லாமல் கேட்பாரற்று கிடக்கும் வகையில் அதிகாரிகள் மாற்றிவிட்டனர். இந்த அறையை நகராட்சி நிர்வாகம் சீர் செய்து  மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

Tags : Nursery room ,bus station ,Chengalpattu ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்