×

நேதாஜி பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம், ஜன.24: காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 124வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
காஞ்சி மாவட்ட நிர்வாகி பிரபாகரன் வரவேற்றார். காஞ்சி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் மதியழகன் தலைமை தாங்கி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், வீரபத்திரன், லோகநாதன், பச்சையப்பன், சண்முகம், நகர நிர்வாகிகள் சுகுமாரன், சந்தானம், பிரபு, இளங்கோவன், முத்துகணேசன்,  ராமர், முனுசாமி,  ராமலிங்கம், இன்பா, குமார், பவுல் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட சேவாதள தலைவர் கந்தவேல் நன்றி கூறினார்.

Tags : Netaji ,birthday party ,
× RELATED மதுரை நேதாஜி சாலையில் உள்துறை...