×

திருத்தணியில் காவல் நிலைய செயல்பாடுகளை கேட்டறிந்த மாணவர்கள்

திருத்தணி, ஜன. 24: திருத்தணியில் காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து  மாணவர்கள் கேட்டறிந்தனர். திருத்தணி பெரியார் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும், 17 மாணவர்கள் ஆசிரியர் அருண்வடிவேல் தலைமையிலும்,  திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 20 மாணவர்கள் தலைமை ஆசிரியர் லோக்கய்யா தலைமையிலும், நேற்று முன்தினம் திருத்தணி காவல் நிலையத்திற்கு  வந்தனர்.அங்கு மாணவர்கள், காவல்துறை  அதிகாரிகள் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது எவ்வாறு விசாரணை செய்கின்றனர், பொதுமக்கள் எந்தெந்த பிரச்னைக்கு காவல்துறையை அணுகலாம் என்பன போன்ற பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.   மேலும், 100  என்ற எண்ணின் மூலம் இலவசமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது காவலர் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் காவலர்கள் விளக்கம் அளித்தனர்.

பின்னர் அரசு பள்ளி மாணவர்கள் திருத்தணியில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்றனர். அந்த கோயில்கள் எப்போது யாரால் கட்டப்பட்டது. தற்போது, அவை  யார் பராமரிக்கின்றனர் என்பன போன்ற விவரங்களை ஆசிரியர்கள் மற்றும்  கோயில் நிர்வாகத்தினரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும், மாணவர்கள், கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பள்ளியில் எவ்வாறு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது என்பன போன்றவை குறித்து மாணவர்கள் நேரில் கண்டு பயிற்சி பெற்றனர்.  தொடர்ந்து மாணவர்கள் கிராம வயல்வெளியில் பயிர் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் விவசாயம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...