×

திருத்தணியில் சாலை பாதுகாப்பு வார விழா

திருத்தணி, ஜன. 24 : திருத்தணி வட்டார மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நேற்று 31வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி பழைய சென்னை சாலையில் உள்ள  திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் சாலை விதிகளை கடைபிடிக்க  வேண்டும் எனவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டியது குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த ஊர்வலத்தை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு கார்த்திகேயன், திருத்தணி டிஎஸ்பி சேகர், திருத்தணி மோட்டார்  வாகன ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். பேரணி சித்தூர் சாலை, அரக்கோணம் சாலை, மாபொசி சாலை வழியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து இரு சக்கர வாகன  ஓட்டிகளுக்கு சாலை விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுறுத்தி பயிற்சி கொடுத்தார். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓட்டுநர் பயிற்சிப்  பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் உரிமையாளர்கள் இரண்டு சக்கர வாகன மெக்கானிக்குகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tirunelveli ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...