×

கன்னியாகுமரியில் சூறைக்காற்று 2வது நாளாக படகு சேவை ரத்து

கன்னியாகுமரி, ஜன.24: கன்னியாகுமரியில் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருவதால் இரண்டாவது நாளாக நேற்றும் படகுசேவை ரத்து செய்யப்பட்டது. சர்வதேச  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் முடிந்தது. தொடர்ந்து   விடுமுறை நாட்களும் முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால்  கன்னியாகுமரியில் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது வெளிநாட்டு  சுற்றுலா பயணிகளும், வடமாநில சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து   செல்கின்றனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் பலத்த காற்று  வீசியது. இதனால்  விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது.  2வதுநாளான நேற்றும் கடலில் சூறைகாற்று வீசியது.  இதனால் அலைகள் வேகமாக வீசியது. இதனால் நேற்றும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. கூட்டம் குறைவாக இருக்கும் என்று கருதி  காலையிலேயே சுற்றுலா பயணிகள் பலர் ஆவர்முடன் விவேகானந்தர் பாறைக்கு  செல்வதற்காக  வந்தனர். ஆனால் படகு சேவை நடக்கவில்லை. சூறைகாற்று காரணமாக  படகு சேவை இல்லை என்று அறிந்ததும் வரிசையில் காத்து நின்ற சுற்றுலா  பயணிகள் ஏமாற்றமுடன் திரும்பி சென்றனர்.

Tags : hurricane ,Kanyakumari ,
× RELATED வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ...