பாஜக, அதிமுக அரசை கண்டித்து கடலூரில் 28ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜன. 24: கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை: தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வரும் 28.01.2020 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் கடலூர் மஞ்சகுப்பம், தலைமை அஞ்சலகம் அருகில், விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்பப் பெற்றும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், விவசாயிகள் விரோத பாஜக, அதிமுக அரசுகளை கண்டித்தும் கடலூர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, விவசாய அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, தொண்டரணி, தொழிலாளரணி, மகளிர் தொண்டரணி, வழக்கறிஞர் அணி, மீனவரணி, நெசவாளர் அணி, விவசாய தொழிலாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, வர்த்தகர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, தொழிலாளர் முன்னேற்றச்சங்கம் ஆகிய அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் கழக முன்னோடிகள், கழக தோழர்களும், விவசாயிகளும் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,protests ,Cuddalore ,
× RELATED ராஜபாளையத்தில் திட்டப்பணிகள் தாமதம்...