குழந்தைகள் நலக்குழு தலைவர் நியமனம்

கடலூர், ஜன. 24: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நலக்குழுவிற்கு 2 உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். குழந்தைகள் நலக்குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 312, 317, 2வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர்-607001 என்ற முகவரியில் கிடைக்க பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என தெரிவித்துள்ளார்.

Tags : child welfare leader ,
× RELATED பனமரத்துப்பட்டி, ஏற்காடு ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் நியமனம்