சிதம்பரத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினவிழா

சிதம்பரம், ஜன. 24: நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 123வது பிறந்தநாள் விழா மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற தேசிய தோழர்களுக்கு பாராட்டு விழா காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரத்தில் நடந்தது. கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சேர்மன் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பழனி வரவேற்றார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்த இந்திய நாட்டின் பிரதமர்கள் கூட கொள்கை மாறாமல் ஆட்சி செய்தார்கள். ஆனால் தற்போதைய பாஜக ஆட்சியில் கொள்கைகளில் மாற்றங்கள் உள்ளது. ஆர்எஸ்எஸ் தலைமை சொல்வதை பாஜக கேட்கிறது. என்றார்.கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் டாக்டர் மணிரத்தினம், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கமல் மணிரத்னம், மாவட்ட, நகர நிர்வாகிகள் விஸ்வநாதன், சத்தியமூர்த்தி, குமார், லட்சுமணன், ராஜரத்தினம், சையதுமிஸ்கின் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags : Birthday Party ,Subhash Chandra Bose ,Chidambaram ,
× RELATED சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா