விருத்தாசலம் நிதி மருத்துவமனை விருக்ஷம் கருத்தரித்தல் மையத்தில் புதிய கட்டிடம் திறப்பு விழா

விருத்தாசலம், ஜன. 24: விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள நிதி மருத்துவமனையில் விருக் ஷம் கருத்தரித்தல் மையத்தில் பல்வேறு சிறப்பு சேவைகளுடன் கூடிய அதிநவீன வசதிகள் கொண்ட விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நிதி மருத்துவமனை டாக்டர்கள் நளினிஅன்புசெழியன் மற்றும் அன்புச்செழியன் ஆகியோர் வரவேற்றனர். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த்,  பிராமணர் சங்க மாநில துணைத் தலைவர் அருணாசலம், இசை ஆசிரியை பூமா அருணாசலம், வழக்கறிஞர்கள் பாலச்சந்திரன், செல்வபாரதி, மணிராஜன் மற்றும் காண்ட்ராக்டர் சுப்பிரமணியன், சங்கர் எல்ஐசி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கு குழந்தையின்மைக்கான மருத்துவத்துடன் இணைந்த புதிய மருத்துவ பிரிவுகளான காஸ்மெட்டிக் கைனகாலஜி எனும் பெண்கள் சார்ந்த இனப்பெருக்க உறுப்புகளுக்கான சிகிச்சை பிரிவு, பெண்கள் உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு வகுப்புகள், பிறந்த சிசு மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, மருத்துவ உடற்பயிற்சி கூடம், உடல் மற்றும் மனம் சார்ந்த மருத்துவ சிகிச்சைகள் போன்ற சேவைகளுடன் சிறப்பம்சம் வாய்ந்த மருத்துவமனையாக விளங்கி வருவதாக நிதி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவ மருத்துவர்கள் சாமிநாதன், மூவேந்தன் கோவிந்தமுருகன் உட்பட தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் நிதி மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Opening Ceremony ,building ,Virthasalam Fertility Center ,
× RELATED பயிற்சி மையம் தொடக்க விழா