குடியரசு தினத்தில் 100 இடங்களில் உறுதியேற்பு கூட்டம்

கடலூர், ஜன. 24: குடியரசு தினத்தன்று கடலூர் மாவட்டத்தில் 100 இடங்களில் உறுதிமொழி ஏற்பு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில், குடியுரிமை சட்டத்திருத்தம்,மக்கள் தொகை பதிவேடு,குடிமக்கள் பதிவேடு போன்ற மக்கள் ஒற்றுமையை பாதிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும், மக்கள் ஒற்றுமை, மதநல்லிணக்கத்தையும் இந்திய அரசியல் சாசனத்தின் முன்னுரையையும் பாதுக்காக்கவும் ஜனவரி 26ம் தேதி கடலூர் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 100 இடங்களில் உறுதிமொழி கூட்டங்கள் நடைபெறுகிறது.உறுதிமொழி கூட்டங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன்,  நெய்வேலி நகரத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார், என தெரிவித்துள்ளார்.


Tags : places ,Republic Day ,
× RELATED தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு