மேம்பாலம் கீழ் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

விழுப்புரம், ஜன. 14:   விழுப்புரம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் காட்பாடி ரயில்வே கேட் மேம்பாலம் அடியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதி குப்பைகள் மற்றும் கழிவுகள் என அனைத்தும் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அப்பகுதியில் வாழும் மக்கள் சுவாசிப்பதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.   குப்பைகளில் பன்றிகள் கூட்டம் கூடுவதால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நேரில் சென்று புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், இனிமேல் கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: