கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஜன. 24:தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் சின்னப்பா தலைமை தாங்கினார். சர்க்கரை ஆலை சங்க நிர்வாகிகள் குருநாதன், ஜோதிராமன், சாந்தமூர்த்தி, மதியழகன், சாரங்கபாணி, தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசுகையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட கரும்புக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர வலியுறுத்தியும், கரும்புக்கு தனி நபர் காப்பீடு செய்திடவும், காப்பீடு செய்வதில் உள்ள முறைகேடுகளை களைந்திட வேண்டும்.

 சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை சுமார் ரூ.192 கோடியை வட்டியுடன் தரணி சர்க்கரை ஆலை ரூ. 95 கோடியும், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை ரூ.26 கோடி, செங்கல்வராயன் ஆலை ரூ.15 கோடி, பண்ணாரி ஆலை ரூ.56 கோடி ஆகிய நிலுவை தொகையை உடனே பெற்றுதர வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர்கள் வேல்மாறன், ஜனார்த்தனன் மற்றும் கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: