×

கோட்டக்குப்பத்தில் செல்போன் கோபுரம்

விழுப்புரம், ஜன. 24:கோட்டக்குப்பத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் குண்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பழையபட்டிணப்பாதையில் செல்போன் கோபுரம் அமைக்கும்பணி நடந்து வருகிறது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தனியார் செல்போன் நிறுவனம் 20 அடி ஆழம் பள்ளம் எடுத்துள்ளதால் அருகிலுள்ள வீடுகள் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார்மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாதபோது செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  பொதுமக்கள் குடியிருக்கும் இப்பகுதியில் அமைத்தால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியும், மனஅழுத்தத்தாலும் பாதிக்கப்படுவார்கள். மேலும் செல்போன் கோபுரம் அமைக்க பேரூராட்சி, தீயணைப்பு அலுவலகம், மாசுகட்டுப்பாட்டுவாரியத்தில் அனுமதி பெறாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக தடுத்துநிறுத்திட வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  

Tags : Cell phone tower ,
× RELATED செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு...