ரூ.8.80 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு

வில்லியனூர், ஜன. 24: வில்லியனூர் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி வளாகத்தில் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றினை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். புதுவை மாநிலம் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதி வளாகத்தில் காவேரி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டிற்காக புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் செலவில் பொதுப்பணித்துறையால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை, தலைமை பொறியாளர் மகாலிங்கம், கண்காணிப்பு பொறியாளர் லூசியன் பெட்ரோ குமார், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் முருகானந்தம், இளநிலை பொறியாளர் சுதர்சனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இப்பணியினை மேற்கொண்டதன் மூலம் சுமார் 4000 பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

Advertising
Advertising

Related Stories: