வேலூர் தாலுகாவில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் பழுதடைந்ததை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு

வேலூர், ஜன.24: கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் பழுதடைந்ததை சீரமைக்க வேண்டும் என்று வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் மனு அளித்தனர். வேலூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் சரவணமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் எருது விடும் விழாவில் பொதுப்பணித்துறை தடையின்மைச் சான்று காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். வேலூர்- ஆற்காடு, காட்பாடி சாலை மற்றும் அரியூர் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

Advertising
Advertising

மேலும் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் பழுதடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 2ம் வெள்ளிக்கிழமை பிடிஓ அலுவலகத்தில் விவசாய குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும். ஊசூர் பகுதியில் சப்-டிவிஷன் மின் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார். கூட்டத்தில் பிடிஓ அலுவலகம் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் பயன்பெரும் பணிகள், நிலவள மேம்பாட்டு பணிகள் மற்றும் விவசாயிகளுக்கு பயன்அளிக்கும் பணிகள் 2019-20 ஆண்டிற்கான விளக்க கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் துணை தாசில்தார் பிரியா, மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: