பாஜவினர் வீடு வீடாக பிரசாரம்

காங்கயம், ஜன. 23:காங்கயத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜவினர் வீடு வீடாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சட்டத்தை மக்களுக்கு புரியவைக்கும் வகையில், காங்கயம் நகரத்தில் இந்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜ சார்பில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். காங்கயம் நகர தலைவர் கலா தலைமையில், மாவட்ட தலைவர் ருத்ரகுமார், காங்கயம் தெற்கு ஒன்றிய தலைவர் ஆனந்குமார், வடக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Bajawin ,
× RELATED பாஜவினர் ஊருக்கு உபதேசம் செய்ய எந்த...