மின் இணைப்பு தவறாக கொடுத்ததால் பால் வியாபாரி வீட்டில் தீ விபத்து

தாராபுரம், ஜன.23: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். பால் வியாபாரி. இவரது மனைவி, மகன் விவசாயம் பார்க்க தோட்டத்துக்கு நேற்று சென்றனர். அப்போது, பாலசுப்பிரமணியம் வீட்டின் அருகே மின்கம்பத்தில் இருந்து பக்கத்துக்கு வீட்டுக்கு புதிய மின் இணைப்பு கொடுக்க வந்த மின் ஊழியர்கள் இணைப்பை கொடுத்துவிட்டு ஏற்கனவே இருந்த இருமுனை மின்வயர்களை ஒன்றாக இணைத்துவிட்டு சென்றனர்.

நெகட்டிவ், பாசிட்டிவ் இணைப்புகள் ஒரே லைனில் சென்றதால் மின்னழுத்தம் அதிகமாகி பாலசுப்பிரமணியம் வீட்டுக்கு கொடுப்பட்டிருந்த இணைப்புகள் திடீெரன தீப்பிடித்து எரிந்தது. மெதுவாக பரவிய தீயால் வீட்டில் இருந்த பேன், பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை சேதமானது. அப் பகுதி மக்கள் ஒன்று திரண்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்து மின் ஊழியர்களிடம் விபத்து குறித்து கேட்டார். அதற்கு அவர்கள் உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்குமாறு கூறி மின்கம்பத்தில் ஏறி தவறாக கொடுத்த மின் இணைப்பை துண்டித்துவிட்டு சென்றனர். இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : house ,dairy dealer ,
× RELATED இலவச அரிசி வழங்க கோரி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்