குடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், ஜன.23: திருப்பூர் மாநகரில் குடிநீர் கட்டணம் செலுத்தாத 24 வீடுகளின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று துண்டித்தனர்.

திருப்பூர் மாநகரில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை வரி வசூல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், வரி செலுத்தாத பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந் நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 24 வீடுகளில் உரிமையாளர்கள் குடிநீர் கட்டணத்தை செலுத்தவில்லை. இதையடுத்து, மாநகராட்சி உதவி ஆணையர் (வருவாய்) தங்கவேல்ராஜன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, 24 வீடுகளின் குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தனர். மேலும், குடிநீர் கட்டணங்களை செலுத்துவதற்காக ஒவ்வொரு மண்டலங்களிலும் இரு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வரியினங்களை முறையாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: