×

சாலை பாதுகாப்பு வார விழா

அவிநாசி, ஜன.23: திருப்பூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக 31 வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று அவிநாசியில் கடைபிடிக்கப்பட்டது. விழாவை மாவட்ட எஸ்பி. திஷா மித்தல் தொடங்கி வைத்தார். இதில், வாகன ஓட்டிகளுக்கு, உடல் பரிசோதனை, இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. மேலும் தலைக்கவசம் அணிந்து வந்த பெண்களை பாராட்டி, ரோஜாப்பூ மற்றும் சாக்லெட்டும், கூல்டிரிங்ஸ் வழங்கி சிறப்பித்தார். இந்த விழாவில், ஹெல்மெட் அணிந்து வந்து போலீசார் பங்கேற்ற இரு சக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை திருப்பூர் எஸ்பி. கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழாவில் அவிநாசி உட்கோட்ட போலீஸ் டி.எஸ்பி. பாஸ்கரன் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

பேரணியில், அவிநாசி இன்ஸ்பெக்டர் இளங்கோ, அவிநாசி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சரசுவதி, குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் சம்பங்கி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதாசிவம், எஸ்.ஜ. அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இதில் ஏராளமான வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags :
× RELATED தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா