அமராவதி அணையில் தண்ணீர் திறக்க எதிர்பார்ப்பு

உடுமலை, ஜன. 23: உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பாசனத்துக்காக, அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டு, சமீபத்தில் நிறுத்தப்பட்டது.

பழைய ஆயக்கட்டு பகுதியில் பல மடங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஆனால், மேலும் சில பகுதிகளில் விவசாயிகள் உயிர் தண்ணீர் திறந்துவிடும்படி  கோரிக்கை விடுத்துள்ளனர். இதை ஏற்று அமராவதி ஆற்றில் இன்று தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Amaravati Dam ,
× RELATED கூட்டமாக படையெடுக்கும் யானைகள் மேய்ச்சல் நிலமானது அமராவதி அணை