அவிநாசியில் ரூ.57 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி,ஜன.23:  அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம்  3399 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5000 முதல் ரூ. 5400 வரையிலும், ஆர்.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5500 முதல் ரூ. 6200 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2000 முதல் ரூ.2500 வரையிலும் ஏலம் போனது. பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ. 57 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில், சேவூர், குன்னத்தூர், அன்னூர், மேட்டூர், தஞ்சாவூர், பேராவூரணி, தர்மபுரி, ஆத்தூர், சத்தியமங்கலம், பென்னாகரம்,  கிணத்துக்கடவு, கோபி, நம்பியூர், புளியம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து 441 பருத்தி விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 12 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். சென்ற வாரத்தைவிட, இந்த வார ஏலத்தில் கோடை கால பருத்தி  வரத்தும், விலையும் அதிகரித்து இருந்தது.  இந்த தகவலை அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: