×

ரெயின்போ நகரில் ஆக்கிரமிப்பு பாதை அகற்றம்

கூடலூர், ஜன.23:கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு துப்புகுட்டிபேட்டை ரெயின்போ நகரில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல கள்ளிக்கோட்டை பிரதான சாலை ஜானகி அம்மாள் திருமண மண்டபம் பகுதியில் இருந்து 2 மீ. அகலத்தில் 200 அடி நீளபாதை உள்ளது. இந்த பாதையில் ஒரு மீட்டர் அகலத்திற்கு அருகில் உள்ள தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்ததால், பாதை ஒரு மீட்டராக சுருங்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூடலூர் ஆர்.டி.ஓ.  ராஜ்குமாரிடம் மனு அளித்தனர். அதன் பேரில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் நில அளவைத் துறையினர் சம்பந்தப்பட்ட பாதை கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபரே வேலியை அகற்றி ஜனவரி 21ம் தேதிக்குள் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தும் வேலி

அகற்றப்படாததால் நேற்று 22ம் தேதி காலை 7.30 மணிக்கு ஆர்.டி.ஓ. உத்தரவின்படி, தாசில்தார், சங்கீதாராணி, வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர் மற்றும் பணியாளர்கள் வேலியை அகற்றும் பணியில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்றி, பாதையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர். நீண்ட கால போராட்டத்திற்கு பின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பாதை மீட்கப்பட்டதால் குடியிருப்பு வாசிகள் மகிழ்சியடைந்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : Rainbow City ,
× RELATED பயிற்சி பெறாததால் செலுத்திய முன்...