×

தமிழக முதல்வர் கோவை வருகை

கோவை, ஜன.23: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவரை தமிழக நகராட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் ஷரவண்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி பெரியய்யா, கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன், எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ஜூனன், அருண்குமார், ஆறுக்குட்டி, கந்தசாமி, சின்னராஜ், கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் முதல்வர் விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார்.  முதல்வர் வருகையையொட்டி சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் வரை அவர் வந்த  வழித்தடத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Coimbatore ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...