வழிப்பறி, கொலையில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டாஸ்

ஈரோடு, ஜன.23:  ஈரோட்டில் தொடர் வழிப்பறி, கொலை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக கடந்த மாதம் ஈரோடு செங்குட்டுவன் வீதியை சேர்ந்த குப்புசாமி மகன் குணா என்ற குணசேகரன் (29) என்பவரை போலீசார் கைது செய்து, கோபி சிறையில் அடைத்தனர். குணசேகரன் மீது ஈரோடு போலீஸ் சப் டிவிசன் பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது. மேலும், வெளிமாவட்டங்களிலும், வெளிமாநிலங்களிலும் கூலிப்படையாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.குணசேகரனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சக்திகணேசன், கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று குணசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, கோபியில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த குணசேகரனை நேற்று கோவை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் அழைத்து சென்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைத்தனர்.

Tags : murder ,victim ,
× RELATED கொலை முயற்சி, வழிப்பறி வழக்கு ரவுடி மீது பாய்ந்தது குண்டாஸ்