மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

ஈரோடு, ஜன.23: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில், மாவட்டத்தில் 5 கல்வி மாவட்டங்களிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், சாலை பாதுகாப்பு வாசகம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், ஈரோடு கல்வி மாவட்டத்திற்கு, காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போட்டிகள் நடந்தது. போட்டிகளை அப்பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி துவக்கி வைத்தார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறுகையில்,`மாவட்டத்தில் 5 கல்வி மாவட்டங்களிலும் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி பேச்சு, ஓவியம், வாசக (ஸ்லோகன்) போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இன்று மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன’ என்றனர்.

Tags :
× RELATED பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி