×

காரியாபட்டி 7வது வார்டில் போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள் மின்வாரியம் கவனிக்குமா?

காரியாபட்டி, ஜன. 23: காரியாபட்டியில் உள்ள 7வது வார்டில் தெருக்களின் மையப்பகுதியில் ஊன்றப்பட்டுள்ள மின்கம்பங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இவைகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள பாண்டியன் நகர் முன்பு 12வது வார்டாக இருந்தது. தற்போது 7வது வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனார். மழை காலங்களில் தெருக்கள் சேறும், சகதியுமாக மாறுகின்றன. இப்பகுதியில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை செல்வதால், புதிய குடியிருப்புக்கள் அதிரித்து வருகின்றன. இந்த வார்டில் உள்ள தெருக்களில் சாலை வசதி இல்லை.

சில இடங்களில் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் முதியவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தெருக்களில் வாறுகால் வசதியில்லாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது. இதில், கொசுக்கள் உருவாகி நோய் பரப்பும் அபாயம் உள்ளது. மேலும், தாமரை தெரு உள்ளிட்ட பல தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே, காரியாபட்டி 7வது வார்டில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும், சாலை வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சரத்ஆறுமுகம் கூறுகையில், ‘பாண்டியன் நகரில் பல தெருக்களில், மின்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அவசர காலங்களில் ஆட்டோ கூட வருவதில்லை. ஒரு சில இடங்களில் மின்கம்பங்களில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து மோசமான நிலையில் உள்ளன. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...