×

அதிமுகவில் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலருக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு

சின்னமனூர், ஜன. 23: அதிமுகவில் சேர்ந்த திமுக கவுன்சிலர் வீட்டிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சின்னமனூர் அருகே பொட்டிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் மனைவி ஜெயந்தி திமுக சார்பில் 1வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றார். சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் 10 இடங்களை கொண்டது. அதில் திமுக 6 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த ஜனவரி 11ம் தேதி சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றனர்.  அன்று 1வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயந்தி சிவக்குமாரை 50 பேர் கொண்ட அதிமுகவினர் போலீஸ் பாதுகாப்புடன் கடத்தி சென்னைக்கு அனுப்பிவிட்டனர். இரண்டு நாட்களில் திமுக கவுன்சிலர் ஜெயந்தி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்துவிட்டார்.

பல நாட்களாக சென்னையியே தங்கிவிட்ட தம்பதியினர் கடந்த வாரம் போலீஸ் பாதுகாப்புடன் பொட்டிபுரம் வந்தனர். இதற்கிடையில் கிராம மக்கள் திமுக கவுன்சிலர் ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து  அதிமுகவில் சேர்ந்ததால் பதவியை உடனடியான ராஜினாமா செய்ய வேண்டும் என கண்டித்து போஸ்டர்களை கிராமங்களில் ஒட்டினர். இதனால் போலீசார் கவுன்சிலர் வீட்டில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் உள்ளனர். சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தலா 5  பேர் என திமுக அதிமுக சமநிலையாக இருப்பதால் இன்னும் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் என மறைமுக தேர்தல் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. திமுக மாவட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மறைமுக தேர்தலை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார்.

Tags : DMK Union Councilor ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...