×

முதியவர் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம், ஜன. 23: ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டையில் கடந்த சில நாட்களாக சுமார் 65 வயதுடைய முதியவர் சுற்றித்திருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று லெக்கையன்கோட்டை- திண்டுக்கல் சாலையில் அம்முதியவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் ஒட்டன்சத்திரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வந்த போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் யார் என்பது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா