×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கோம்பை பகுதிகளில் காய்கறிகளை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு

தேவாரம், ஜன. 23: கோம்பை பகுதிகளில் விளையும் காய்கறிகளை பாதுகாத்திட குளிர்பதன கிடங்கு அரசினால் கட்டித்தரப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோம்பை, பண்ணைப்புரம், மேலசிந்தலைசேரி, பல்லவராயன்பட்டி, டி.சிந்தலைசேரி, லட்சுமிநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களை சுற்றிலும் அதிகளவில் காய்கறிகள் விளைகின்றன. பீன்ஸ், தக்காளி, வெண்டை, முருங்கை, அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விளைகின்றன.
இவை விளைந்தவுடன் உடனடியாக பறிக்கப்பட்டு மார்க்கெட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டு விற்பனை நடக்கிறது. திருமண காலங்கள், விசேஷ காலங்களில் விலை உயர்ந்து காணப்படுகிறது. மற்ற காலங்களில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் பெரும் சிக்கலை சந்திக்கின்றனர். காரணம் இதனை இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு உரிய குளிர்பதன கிட்டங்கி எதுவும் இல்லை. குறிப்பாக தமிழக அரசினால் இவை அமைக்கப்பட்டால் குறைந்த வாடகையில் விவசாயிகள் காய்கறிகளை இருப்புவைத்து பின்பு விற்பனை செய்து கொள்வார்கள். காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்க உடனடியாக குளிர்பதன கிட்டங்கி அமைத்திட வேண்டும். விவசாயிகள் கூறுகையில், ‘கோம்பையை மையமாக கொண்டு தமிழகஅரசு குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். இதனால் காய்கறிகள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுவதுடன் தேவையான நேரத்தில் எடுத்து விற்பனை செய்வதற்கும் வசதியாக இருக்கும். இதற்கு கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்றனர்.

Tags : kombi areas ,
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு