×

ராமேஸ்வரத்தில் மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சி

ராமேஸ்வரம், ஜன.23:  ராமேஸ்வரத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர்கள் பங்கேற்ற மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசின் இளைஞர் நலன்,விளையாட்டு துறையின் சார்பில் நேரு யுவகேந்திரா மற்றும் ஏராகாடு கிராம இளைஞர் மன்றம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு கிராம தலைவர் முருகன் தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நோமான் அக்ரம் முன்னிலை வகித்தார். ராமேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலர் ரோட்ரிக்கோ, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் துரைமுருகன், ஏராகாடு கிராம இளைஞர் மன்ற  தலைவர் பிரேம்குமார் உட்பட பலர் பேசினர். தொடர்ந்து ஜெகதீஸ்குமார் தலைமையில் மாதிரி பாராளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவைத்தலைவர் உரை, பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் மீதான விவாதம், நேரம் இல்லா நேரம், தீர்மானம் தாக்கல் செய்தல், தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு என பாராளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நடத்தி காட்டப்பட்டது. அமைச்சர்களாகவும், எதிர்க்கட்சி எம்பி.க்களாகவும் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இளைஞர்கள் பங்கேற்ற பாரளுமன்ற நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags : Sample Parliament ,Rameswaram ,
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...