குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

திருப்பரங்குன்றம், ஜன.23: தினகரன் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றத்தில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு, தண்ணீர் வீணாவது நிறுத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடு உள்ளது.  இந்த சாலையின் வழியாகத்தான் திருப்பரங்குன்றம் காவல் நிலையம், காய்கறி மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் செல்ல முடியும். இந்நிலையில் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது. மேலும் அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்ததோடு, ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் சென்றது. இது குறித்து  நேற்றைய தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. உடனடியாக எம்எல்ஏ டாக்டர் சரவணன் பரிந்துரையின்படி  மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடை ப்பை சரி செய்தனர். இதனால் குடிநீர் வீணானது நிறுத்தப்பட்டதோடு வாகன ஓட்டிகளும் நிம்மதியடைந்தனர். இது குறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ், துரித நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த எம்எல்ஏ டாக்டர் சரவணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: