×

வீரகனூர் சுவேத நதிக்கரையில் மணல் கொள்ளை

கெங்கவல்லி, ஜன.23:  கெங்கவல்லி அருகே வீரகனூர் சுவேத நதிக்கரையில் நடக்கும் மணல் கொள்ளையை, வருவாய் துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கெங்கவல்லி அடுத்த வீரகனூர் சுவேத நதிக்கரையில், தினமும் 50க்கும் மேற்பட்ட ஆட்களை கொண்டு, மணலை சலித்து மலை போல் குவித்து வைத்துள்ளனர். அந்த மணலை இரவு நேரங்களில், டிராக்டர்கள் மூலம் மர்ம நபர்கள் கடத்தி சென்று, ஒரு டிப்பர் லாரி மணல் ₹25ஆயிரம் முதல் ₹40ஆயிரம் வரை விற்பனை செய்து வருகின்றனர்.  மணல் கடத்தல் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், அடுத்த 20நிமிடத்தில் அனைத்து மணல் கடத்தல்காரர்களுக்கும் தகவல் பரவி விடுகிறது. இந்நிலையில் நேற்று காலை, மணலை சலித்து இரவில் கடத்துவதற்காக குவித்து வைத்திருந்தனர்.

இதுகுறித்து ஆத்தூர் ஆர்டிஓ, கெங்கவல்லி தாசில்தார் நடவடிக்கை எடுக்க, வீரகனூர் வருவாய் ஆய்வாளர் சங்கரிக்கு அறிவுறுத்தினர். ஆனால், வருவாய் ஆய்வாளர் இரண்டு மண்வெட்டிகளை மட்டும் எடுத்து சென்று நிரவி விட்டு வரும்படி தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து வருவாய் ஆய்வாளர் சங்கரிடம் கேட்டபோது, ‘மணலை பறிமுதல் செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை. அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மணல் கடத்தலின் போது, வாகனத்துடன் பறிமுதல் செய்ய மட்டுமே அதிகாரம் உள்ளது,’ என்றார்.

Tags : banks ,river ,Suveda ,
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி