×

மேட்டூரில் காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம்

மேட்டூர், ஜன.23: சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, மேட்டூரில் போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நேற்று விநியோகம் செய்தனர். சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, மேட்டூர்  அனல் மின் நிலையம் எதிரே பணி முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு, மேட்டூர் டிஎஸ்பி சௌந்தரராஜன், கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர்  துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் வந்த தொழிலாளர்களுக்கு, நாளை முதல்  தலைக்கவசம் அணிந்து வரும்படி அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கருமலைக்கூடல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுதுரை, ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆட்டையாம்பட்டி: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நேற்று ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ, டாக்ஸி, லாரி  டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. முகாமில் வீரபாண்டி அரசு உதவி கண் மருத்துவர் சுந்தரி கலந்துகொண்டு,  சுமார் 30க்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு, இலவச கண்  பரிசோதனை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் குலசேகரன்  மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் ரோட்டரி மற்றும் ரோட்ராக்ட் சங்கம் சார்பில், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளக்காடு மாரியம்மன் கோயில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பஸ் நிலையம், கடைவீதி, வண்டிமேடு மற்றும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேச்சேரி: தொளசம்பட்டி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வாகன பேரணி
நடந்தது. இதில் தொளசம்பட்டி இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில், தொளசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து பெண்கள் மற்றும் காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து
இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Tags : Mettur ,
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்