×

முன்னாள் படைவீரர்களுக்கு பணிவாய்ப்பு

கிருஷ்ணகிரி, ஜன.23: கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஜூனியர் அசிஸ்டெண்ட் (கஸ்டமர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ்) ரேங்க் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. அப்பணியிடங்களுக்கு www.sbi.co.in/carreers என்ற இணையதள முகவரிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முப்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற, தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Veterans ,
× RELATED 601 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய...