×

பர்கூர் அருகே எம்எல்ஏ முயற்சியால் இடைநின்ற 5 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு


கிருஷ்ணகிரி, ஜன.23:  பர்கூர் அருகே நடந்த கள ஆய்வை தொடர்ந்து, பள்ளியை விட்டு இடைநின்ற 5 மாணவர்களை எம்எல்ஏ மீட்டு, மீண்டும் பள்ளியில் சேர்த்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வளமையம் சார்பில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு மற்றும் கள ஆய்வு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, ஒப்பதவாடி கிராமத்தில் உள்ள இருளர் காலனியில் நடந்த கள ஆய்வின்போது பள்ளி இடைநின்ற 5 மாணவர்களை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, 5 மாணவர்களையும், உடனடியாக அங்குள்ள ஒப்பதவாடி அரசு பள்ளியில் எம்எல்ஏ சேர்த்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி பேசுகையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தவறாமல் தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் அரசு வழங்கி வருகிறது. எனவே, மாணவர்களை இடை நிற்றலை தடுக்கவும், கள ஆய்வு பணியை தொடர்ந்து மேற்கொள்ள அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார். இந்த ஆய்வில் மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் சின்னப்பன், உதவி திட்ட அலுவலர் நாராயணா, பர்கூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமார், வட்டார கல்வி அலுவலர் சம்பத், ஆசிரியர் பயிற்றுநர்கள் விஜயலட்சுமி, வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,Burgur ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா