×

ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் ஓவியக்கண்காட்சி

ஓசூர், ஜன.23: ஓசூர் எம்ஜிஆர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் ஈரநிலம் அறக்கட்டளையும் இணைந்து அன்னை பூமி என்ற தலைப்பில் கல்லூரியில் ஓவியக்கண்காட்சி நடத்தியது.கண்காட்சியை கல்லூரி முதல்வர் முத்துமணி திறந்து வைத்தார். அவர் மாணவர்களிடம் சமூக சிந்தனை உடைய சித்திரங்களை வரைந்து தங்களின் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைவதோடு தனித்தன்மையும் வெளிப்படும் என்றார். ஓவியக்கண்காட்சியில், கணினி அறிவியல் துறைத்தலைவர் சாந்தி ஜெஸ்லெட், வணிகவியல் துறைத்தலைவர் மதிவாணன், கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் சிவராமன், நுண்ணுயிரியல் துறைத்தலைவர் யுவராஜ், உயிர் தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் பாலாஜி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

கருத்தமைப்போடு வரையப்பட்ட ஓவியங்களான வறட்சி, மழை நீர் சேகரிப்பு, காடுகளின் அவலநிலை, தண்ணீருக்காக ஏங்கும் மக்கள், மரங்களை பாதுகாத்தல் போன்ற ஓவியங்கள் மாணவர்களை வெகுவாக கவர்ந்தன. இக்கண்காட்சியில் ஈரநிலம் ஓவியர் தமிழரசன், அன்னை பூமி என்ற தலைப்பில் பல்வேறு ஓவியங்களை வரைந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை எம்ஜிஆர் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் லெனின், பேராசிரியர் விஜயலட்சுமி ஆகியோர்கள் செய்திருந்தனர்.

Tags : MGR College ,Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு