×

காரிமங்கலம் நகருக்குள் பொதுமக்களை அச்சுறுத்தும் அதிவேக தனியார் பஸ்கள்

காரிமங்கலம், ஜன.23: காரிமங்கலம் நகருக்குள் அசுர வேகத்தில் சென்று வரும் தனியார் பஸ்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதை கட்டுப்படுத்த போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரிமங்கலம் வழியாக ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது. தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ்கள், காரிமங்கலம் நகருக்குள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கெரகோடஅள்ளி பிரிவு சாலையில் இருந்து ராமசாமி கோயில் காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் வரை, தனியார்கள் பஸ்கள் ஏர்ஹாரன்களை ஒலித்தபடி, அதிவேகமாக செல்கின்றன.

அதேபோல், தர்மபுரியில் இருந்து வரும் தனியார் பஸ்கள், ஏர்ஹாரன்களை) ஒலிப்பதுடன், பாடல்களை அதிக சத்தமாக வைத்து வருகின்றனர். இதனால் சாலையோரம் நடந்து செல்பவர்கள், அலறியடித்தபடி செல்கின்றனர். சில சமயங்களில், விபத்து அபாயம் நேரிடுகிறது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிவேகத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து, அதன் டிரைவர்கள் மீது போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : civilians ,
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...