×

மாணவர்கள் பாடநூல்களை கடந்து வாசிக்க வேண்டும்

தர்மபுரி, ஜன.23: தர்மபுரி அருகே சந்தப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுடன் நேர்பட பேசு என்கிற நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ஜவகர் தலைமை வகித்தார். ஆசிரியர் தங்கமணி வரவேற்றார். நிகழ்ச்சியில், செக் குடியரசு லிபர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிரின்ஸ் அர்விந் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், செல்போன் பயன்பாடு நம்மிடையே அதிகரித்துள்ளது. இவற்றின் தொடர்பால், மனித உடலில் உள்ள நரம்புகள் பாதிப்படையும். கண் பார்வைப் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, இவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இதேபோல், பிளாஸ்டிக் பயன்பாட்டினால், சூழலுக்கும், மனித உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்ப்பதற்கான நிரந்தர தீர்வு காண வேண்டும் அல்லது மறுசுழற்சி செய்ய வேண்டும். மாணவர்கள் பாடங்களை ஆழமாகப் புரிந்து பயில வேண்டும். அதேவேளையில், பாடநூல்களை கடந்து அறிவுசார் நூல்களை வாசிக்கும் வகையில் தங்களது வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஆசிரியர் வேடியப்பன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா