×

சுரண்டையில் விவசாயிகளின் முயற்சியில் மதிப்பு கூட்டு இயந்திரங்கள் கலெக்டர் துவக்கி வைத்தார்

சுரண்டை, ஐன.23: சுரண்டையில் விவசாயிகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்தார்.சுரண்டை சிவகுருநாதபுரத்தில் சுமார் 570 பங்குதாரர்களுடன் தென்றல் உழவர் உற்பத்தியாளர் கம்பெனிக்கு வேளாண்மை பொறியியல் துறை உதவியுடன் நபார்டு வங்கியால் ரூ.10 லட்சம் மானிய கடன் வழங்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள மதிப்பு கூட்டு இயந்திரங்களின் தொகுப்பை தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் துவக்கி வைத்து பார்வையிட்டு எந்திரங்கள் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.மேலும் சந்தைபடுத்துதல் தொடர்பான ஆலோசனை விவசாயிகளுக்கு வழங்கினார். இத்திட்டத்தில் எண்ணெய் ஆட்டுதல், நிலக்கடலை உடைத்தல், மாவு திரிந்தால், சிறுதானியங்கள் மெருகூட்டுதல், கல் பிரித்தல் , பருப்பு,உளுந்து ஆகியவற்றில் இருந்து தோல் நீக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல இயந்திரங்கள் உள்ளன.

இந்நிறுவனத்தில் விவசாயிகள் குறைந்த செலவில் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தொடங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் சுரண்டை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.நிகழ்ச்சியில் உழவர் மன்ற மூத்த நிர்வாகி ராஜு, தர்மகர்த்தா தங்கையா, ஜெயபால், அன்னபிரகாசம், கல்பனா, சேர்மன் அருணாசலம், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், ராஜேந்திரன், திமுக மாவட்ட பிரதிநிதி ஆறுமுகச்சாமி, தெய்வேந்திரன், செல்வராஜ், மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : Machines Collector ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் கலெக்டர் திடீர் ஆய்வு