டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

புளியங்குடி, ஜன. 23:  சிவகிரி டவுண் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள 10 வார்டுகளில் டெங்கு ஒழிப்பு பணி நடந்தது.  சிவகிரி டவுண் பஞ்சாயத்தில் உள்ள 5,8,9,10,16 உட்பட 10 வார்டுகளில் டெங்கு நோய் ஒழிப்பு முகாம் நடைபெற்றது. தென்காசி கலெக்டர்  உத்தரவின்படி மாவட்ட பேரூராட்சியின் உதவி இயக்குனர் குத்தாலிங்கம் வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்திசரவணபாய் தலைமையில் அருணாவதி, மயில்வாகனம், செண்பகவிநாயகம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர்கள் கீழப்பாவூர் ஆய்குடி, அச்சன்புதூர் மேலகரம், இலஞ்சி, பண்பொழி, புதூர் ஆகிய டவுண் பஞ்சாயத்துகளின் நிர்வாக அலுவலர்கள் துப்புரவு அலுவலர், துப்புரவு மேற்பார்வையாளர்கள், 50 மஸ்தூர் பணியாளர்கள், 30 துப்புரவு பணியாளர்கள், 3 மருத்துவர்கள், 5 சுகாதார ஆய்வாளர்கள், 10 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  முழு சுகாதார பணிகளில் ஈடுபட்டனர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சந்தி விநாயகர் கோவில் தெருவை  சேர்ந்த நல்லசிவன் மனைவி ராஜேஸ்வரி (29), திருப்பதி மகன் பாலா (16), காளீஸ்வரன் மகன் முரளி (12) ஆகியோர்களின் வீடுகளுக்கு மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குத்தாலிங்கம், மற்றும் மருத்துவ குழுவினர் வீடுகளுக்கு சென்று  மேற்சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்கினர். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. மேலும் நோய் பரவாமல் இருக்க வேண்டிய சுகாதார முறைகளை கடைபிடித்திடுமாறு அறிவுறுத்தினர்.

Related Stories: