×

கலசபாக்கம் அடுத்த கடலாடியில் 100 நாள் வேலை திட்டப் பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு

கலசபாக்கம், ஜன.23: கலசபாக்கம் அருகே 100 நாள் வேலை திட்டப் பணிகளை நேற்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டம் மற்றும் மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை மத்திய குழுவினர் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, கலசபாக்கம் ஒன்றியம் கடலாடி கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடக்கும் மரக்கன்றுகள் உற்பத்தி, பழத்தோட்டம், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிக்கும் பணி, மண்புழு உரம் தயாரித்தல், கால்நடைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேற்று 100 வேலை திட்ட மத்திய இயக்குனர் ராகவேந்திரா பிரதாப்சிங் தலைமையில், கண்காணிப்பாளர்கள் விக்ரம் பர்கவா, ஹன்சல்குமார் சுதிர்பகாய்சுதார், சுருதிசிங் ெகாண்ட குழுவினர் ஆய்வுசெய்தனர். மேலும், சொட்டுநீர் பாசனம் மூலம் பழத்தோட்டங்கள் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி ஆகியவற்றை பார்வையிட்ட மத்திய குழுவினர் ஊராட்சி நிர்வாகத்தை பாராட்டினர். அப்போது, திட்ட இயக்குனர் ெஜயசுதா, ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் சென்னன், ஊராட்சி தலைவர் ஆறுமுகம், துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி செல்வம், பிடிஓக்கள் மரியதேவ் ஆனந்த், அன்பழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : team ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா