அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாள் தர்ணா

புதுச்சேரி,  ஜன. 23: புதுவையில் அங்கன்வாடி ஊழியர்கள் பணிநிரந்தரம், 7வது ஊதியக்குழு  சம்பள பரிந்துரை உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து ஜென்மராக்கினி மாதா கோயில்  எதிரே தர்ணா போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். நேற்று 2வது நாளாக அவர்களின்  போராட்டம் நீடித்தது. சங்கத்தலைவர் ராஜலட்சுமி தலைமையில்  நடைபெற்ற இந்த போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மட்டுமின்றி  உதவியாளர்களும் கலந்து கொண்டனர். இதன் காரணமாக பெரும்பாலான அங்கன்வாடிகள்  நேற்று இயங்காமல் மூடப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: