ரவுடி பொடிமாஸ் சரத் குண்டர் சட்டத்தில் கைது

புதுச்சேரி, ஜன. 23:  கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி பொடிமாஸ் என்ற சரத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  புதுவை லாஸ்பேட்டை கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் ெபாடிமாஸ் என்ற சரத்  (28). ரவுடியான இவர் மீது 3 கொலை முயற்சி வழக்கும், 2 நாட்டு வெடிகுண்டு  தயாரித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. தற்போது நீதிமன்றத்தை அணுகி நிபந்தனை  ஜாமீனில் வெளியே வருவதற்கான நடவடிக்கையை அவர் மேற்கொண்டிருந்த நிலையில்,  பொடிமாஸ் சரத்தால் லாஸ்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் அவரது உயிருக்கு ஆபத்து  இருப்பதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வடக்கு  எஸ்பி சுபம் கோஷ் உத்தரவின்பேரில், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ  கீர்த்தி தலைமையிலான போலீசார் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ்  நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டிருந்தனர். இதை பரிசீலனை  செய்த மாவட்ட கலெக்டர் அருண், பொடிமாஸ் என்ற சரத்தை குண்டாஸில் கைது செய்ய  அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவரது உத்தரவு நகலுடன்  காலாப்பட்டு சிறைக்கு விரைந்த லாஸ்பேட்டை போலீசார், அவரிடம் இந்நகலை வழங்கி  குண்டாஸில் அவரை கைது செய்தனர். இதன்மூலம் அவர் அடுத்த ஓராண்டு காலம்  சிறையில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: