வியாபாரிக்கு கத்திவெட்டு

புதுச்சேரி,  ஜன. 23:  புதுவை ராஜா சிங் வீதியில் வசிப்பவர் ஷேக் இஸ்மாயில் (47).  முத்தியால்பேட்டையில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று  இரவு இவரது வீட்டிற்கு பைக்கில் வந்த 2 அடையாளம் தெரியாத ஆசாமிகள், ஷேக்  இஸ்மாயிலை கத்தியால் அவரது இடது கையில் வெட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.   இதுகுறித்து ஷேக் இஸ்மாயில் அளித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார்  வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மாமூல் தகராறில் அவரை ரவுடிகள்  வெட்டினார்களா அல்லது வேறு பிரச்னையா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை  நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

Related Stories: