வீட்டின் கதவை உடைத்து காப்பர் கம்பிகள் திருடியவர் கைது

பாகூர், ஜன. 23: புதுவை கிருமாம்பாக்கத்தில் வீட்டின் கதவை உடைத்து 15 கிலோ காப்பர் கம்பிகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுவை கிருமாம்பாக்கம் சச்சின் நகரை சேர்ந்தவர் சரோஜா (34), இவர் அங்கு பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டில் 15 கிலோ காப்பர் கம்பிகளை வைத்திருந்தார். நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர் காப்பர் கம்பிகளை திருடி சென்றுள்ளார். இது குறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர், கிருமாம்பாக்கம் புறாக்குட்டை வீதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பதும், சரோஜா வீட்டில் காப்பர் கம்பிகளை திருடியதும் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின்பேரில் அரசு மருத்துவமனை அருகே புதரில் மறைத்து வைத்திருந்த காப்பர் கம்பிகளை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: